| 1 | கடன் வகை | பயிர் கடன்கள் (கிசான் கிரிடிட் கார்டு, விவசாய நகைக் கடன், கூட்டுப் பொறுப்புக்குழுக் கடன்) |
| 2 | கடன் வழங்கும் காரியங்கள் | பயிர் சாகுபடி செய்ய |
| 3 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் |
| 4 | அனுமதிக்கும் கடனின் அளவு | பயிர்க்கடன் அளவு விகிதங்களுக்கு உட்பட்டு |
| 5 | பங்குத்தொகை | குறு சிறு விவசாயிகள 5 சதவீதம்
இதர விவசாயிகள் 10 சதவீதம் |
| 6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | ரொக்கம் மற்றும் பொருள் பகுதி |
| 7 | வட்டி விகிதம் | 7 சதவீதம் (தவணைத் தேதிக்கு முன் திரும்பிச் செலுத்தும் கடன்களுக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை) |
| 8 | தவணைக் காலம் நிர்ணயம் | 6 மாதம் முதல் 12 மாதம் வரை, கரும்பு பயிருக்கு 15 மாதங்கள் |
| 9 | கடன் திருப்பிச் செலுத்தும் காலம் | பெறும் பயிர்க்கடனைப் பொறுத்து |
| 10 | தவணைத் தொகை செலுத்தும் முறை | தவணைத் தேதிக்குள் |
| 11 | அபராத வட்டி | 1 சதவீதம் |
| 12 | கட்டணங்கள் | ஏதுமில்லை |
| 13 | மானியம் | தவணைத் தேதிக்கு முன் திருப்பிச் செலுத்தும் கடன்களுக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை |
| 14 | கடனுக்கு ஈடு | ரூபாய் ஒரு லட்சம் வரை நபர் ஜாமீன் பேரிலும் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கடன்களுக்கு நில அடமானத்திலும் பேரிலும் |
| 15 | வழங்க வேண்டிய ஆவணங்கள் | நில உடைமை ஆவணங்கள் (வருவாய் துறையிடமிருந்து) |
| 16 | காப்பீடு | பயிர்க் காப்பீடு அமுல்படுத்தப்பட்டுள்ளது |