ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி 11-07-1980 அன்று பதிவு செயப்பட்டு 03-02-1982 முதல் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் 25 கிளைகளுடனும், திருப்பூர் மாவட்டத்தில் 8 கிளைகளுடனும் செயல்பட்டு வருகிறது. தலைமையகம் உட்பட மொத்தமுள்ள 33 கிளைகளில் 13 கிளைகள் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.
17.07.2013 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு பொறுப்பேற்று, திரு.என்.கிருஷ்ணராஜ் அவர்கள் தலைவராகவும், 18.05.2018 முதல் திரு. R.ராமதாஸ் அவர்கள் மேலாண்மை இயக்குநராகவும் வங்கியை நிர்வகித்து வருகின்றனர்.
31.03.2018 அன்று வங்கியின் "அ" வகுப்பு உறுப்பினர் எண்ணிக்கை 1308. செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ.14705 இலட்சம். வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.15000/- இலட்சம். ஒரு பங்கு மதிப்பு ரூ.100/-.
வங்கிக் கணக்குகளை தமிழக அரசின் கூட்டுறவுத் தணிக்கைத் துறை தணிக்கை அலுவலர்களால் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 2011-ம் ஆண்டு முதல் வங்கிக் கணக்குகளை பட்டயக் கணக்காளர்களாலும் தணிக்கை செய்யப்படுகிறது.
வங்கி 31.03.2018 உடன் முடிவுற்ற நிதியாண்டில் ரூ.14.05 கோடி நிகர இலாபம் ஈட்டி தணிக்கையில் “அ” வகுப்பாக தரம் பிரிக்கப்பட்டுள்ளது. வங்கி துவங்கியதிலிருந்து தொடர்ந்து இலாபத்தில் செயல்பட்டு தணிக்கையில் “அ” வகுப்பில் உள்ளது. வங்கியினை நபார்டு வங்கியினரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.